கஷ்மீரின் புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பிகனர்(Bikaner) மாவட்ட ஆட்சியர் குமார் பால் கௌதம் இந்த கடுமையான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
பிகனர் மாவட்டத்தில் வசிக்கும் பக்கிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு 2 மாதங்கள் வரை செல்லுபடியாகும். மேலும் பக்கிஸ்தான் செல்லிடப்பேசி இணைப்பு (சிம்) அட்டைகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.