அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்கேட் 2019 என்ற விழாவில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு என்ற புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போனை 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் அளவுகளில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 4380 எம்.ஏ.ஹெச் பேட்டரி (இரண்டு பேட்டரிகள்) உள்ளன. 12 ஜி.பி. ரேம், 512 ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளது தேவைப்படும் போது இதனை மடித்துக்கொள்ளலாம்.
இதில் 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் 10 எம்.பி. செல்ஃபி கேமரா என்ற சிறப்பம்சங்களும் இணைந்து உள்ளன.
சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு புதிய ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 26 2019 முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,41,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் நான்கு வித நிறங்களில் கிடைக்கும். 5ஜி தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் வகையில் கேலக்ஸி ஃபோல்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என சாம்சங் அறிவித்துள்ளது.