கஷ்மீர் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை வேதனையளிக்கின்றதென முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ருவிட்டர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஷ்மீருக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டுமென ஆளுநர் அண்மையில் கூறியிருந்தார். இதேபோன்று அம்மக்கள் இந்தியதவின் அங்கமாக இருக்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ளது.
இத்தகைய முரண்பாடான எண்ணம் மிகவும் வேதனையளிக்கின்றது எனவும், காஷ்மீர் மக்களை அனைவரும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிலமை உருவாக வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.