மியன்மாரில் ரோஹிங்ஜியா சிறுபான்மை முஸ்லீங்களின் ரக்கைன் மாநிலத்தில் கூடுதலன முதலீடுகள் செய்யப்பட வேண்டுமென அந்நாட்டு அரச தலைவி ஆன் சான் சூச்கீ தெரிவித்துள்ளார்.
உலகம் பாதகமான விளைவுகளை மட்டுமே நினைவில் கொண்டுள்ளதாகவும், நிதி உதவி வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன ஒடுக்குமுறை அடிப்படையிலான தாக்குதல்களைத் தொடர்ந்து 730000 ரோஹிங்ஜியா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து அண்டை நாடான பங்களாதேஸில் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.