அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு, சீன நிறுவனத்தின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளது.
நேற்று அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதிக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், அம்பாந்தோட்டை கடற்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி கொமடோர் அசோக விஜேசிறிவர்த்தனவைச் சந்தித்து பாதுகாப்பு ஒழுங்கமைப்புகள் குறித்து விசாரித்தார்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி றியர் அட்மிரல் ஜெயந்த சில்வா, அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் ஹெஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.