பிரெக்ஸிட் தொடர்பில் சாதகமான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் இறுதி முனைப்பாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, சட்ட மா அதிபரை பிரசல்ஸிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சுமூகமான முறையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிக் கொள்வதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக மே தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிப் பகுதியில் அதிகாரபூர்வமாக பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற உள்ளது.
அயர்லாந்தின் பெக்ஸ்டொப் எனப்படும் காப்புறுதித் திட்ட யோசனைகளில் திருத்தங்களைச் செய்வதற்கும், பொருளாதார ரீதியில் பிரித்தானியாவிற்கு நலன்களை பெற்றுக் கொள்ளக்கூடிய இணக்கப்பாட்டை எட்டுவதற்கும் சட்ட மா அதிபர் Geoffrey Cox தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்றை மே, பிரேசல்ஸிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம இணக்கப்பாட்டாளர் மைக்கல் பார்னியருடன், பிரித்தானிய சட்ட மா அதிபர் ஜிப்ரி கொக்ஸ் மற்றும் பிரிக்ஸிட் அமைச்சர் ஸ்டீவன் பார்க்ளே (Stephen Barclay) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.