கனடாவிடமிருந்து கனோலா உற்பத்திகளை இறக்குமதி செய்வதனை சீன அரசாங்கம் நிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான எண்ணெய் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பிரதான தவார வகைகளில் ஒன்றாக கனோலா கருதப்படுகின்றது.
நீண்ட காலமாக கனடாவின் வின்னி பிக்கிலிருந்து, சீனாவிற்கு பெருந்தொகையான கனோலா உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கனோலா தொகுதியில் தீங்கு ஏற்படுத்தக்கூடிய பூச்சிளில் இருந்தான கிருமித்தொற்று காணப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கனடாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கனோலா உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு சீன அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடுமையான இராஜதந்திர முறுகல் நிலைமை நீடித்து வரும் நிலையில் இந்த விடயம் மேலும் பிரச்சினைகளை பூதாகாரமாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சீன மக்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிகவும் முதன்மையானது எனவும் இதனால் குறித்த உற்பத்திகள் இறக்குமதி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





