பயங்கரவாதிகளுக்கு எதிராக பக்கிஸ்தான் செய்திருக்க வேண்டியதை நாங்கள் செய்தோம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பக்கிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, நிதி, மற்றும் ஆயுத உதவி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நாடாகவே திகழ்கின்றது என அவர் குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதலுக்கான பயிற்சியும், நிதியும் அளிக்கப்படும் மையத்தை தாக்குவதாக முடிவு எடுத்தோம் என்று தெரிவித்த, அவர் இது ராணுவ நடவடிக்கை அல்ல எனவும் இது பயங்கரவாதிகளுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இதை பக்கிஸ்தான் செய்திருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் தங்கி இருந்த முகாம்களை இந்திய விமானப்படையை வைத்து தகர்த்திருக்கிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.