பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்த, பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளில் ஒருவரான திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் செல்வி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த பொள்ளாச்சி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உட்பட 4 பேர் மீது ஏற்கனவே, கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்ட நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.