ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரும், சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று, பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பொருளாதார மாநாடு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
”ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறினாலும், சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகை உள்ளிட்ட தீர்வை விலக்குகள் அளிக்கப்படும்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக, சிறிலங்காவின் ஏற்றுமதிச் சந்தையில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக பிரித்தானியவே இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.