ஒன்டாரியோவில் அதிகளவு வருமானம் ஈட்டுவோர் வரிசையில் சக்தி வள நிறுவனமான நிறுவன நிறைவேற்று அதிகாரிகள் முன்னணி வகிக்கின்றனர்.
அதிகளவு வருமானம் ஈட்டுவோர் தொhடர்பான சன்சைன் அறிக்கையை ஒன்டாரியோ அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஒரு இலட்சம் டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டிய பொதுத்துறை ஊழியர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய அறிக்கையே சன்சைன் அறிக்கை எனப்படுகின்றது.
இந்த அறிக்கையில் முதல் பத்து இடங்களையும் ஆண்கள் பிடித்துக் கொண்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
தொடர்ச்சியாக மூன்றாம் தடவையாக ஒன்டாரியோ சக்தி வள நிறுவனமான ஒன்டாரியோ பவர் ஜெனரேஷன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜெப்ரி லயாஷ் (துநககசநல டுலயளா) கடந்த 2018ம் ஆண்டில் 1746824.96 (1.7 மில்லியன்) டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளார். 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 12.3 சதவீதம் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாரியோ மாகாண அரச துறைப் பணியாளர்களின் சம்பள அதிகரிப்புக்கள் சமாளிக்க முடியாதவையென புறொகிறசிவ் கொன்சேவடிவ் அரசு கூறியுள்ளது.
2003 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் சம்பளங்கள் சராசரியாக 48.1 சதவீதத்தால் அதிகரித்ததாக அரசு தெரிவித்துள்ளது.