சீனாவுடன் வெகுவிரைவில் வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்றம்ப் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் சீன பிரதமருடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் வர்த்தக உடன்பாட்டை எட்டும் செயற்பாடு மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், எதிர்வரும் நான்கு வாரங்களுக்குள் உடன்பாடு கையெழுத்திடப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒரு உடன்பாடு ஏற்படுத்தப்படுமாயின் உச்சிமாநாடொன்று இடம்பெறும் எனவும் எனவே, ஓரிரு வாரங்களில் அது தொடர்பாக தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எட்டப்படவுள்ள உடன்பாடு சீனாவிற்கு சிறந்ததாக அமையும். இதன்மூலம் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை சீனா தொடரலாம் என தெரிவித்துள்ளார்.
சீனா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக காணப்படுகிறது. எனவே, சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கையையும், உறவையும் தொடர அமெரிக்கா பெரிதும் எதிர்பார்த்துள்ளது என ட்றாம்ப் குறிப்பிட்டுள்ளார்.