வடக்கு கிழக்கு மாகாணங்களைக் காண்பித்து மஹிந்த அரசாங்கம் முடிந்தளவு தெற்கை அபிவிருத்தி செய்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த கடந்த அரசாங்கம் இறுதியில் மாகாணங்களை இனங்கண்டு அவர்களுக்கான அபிவிருத்தியை உரிய முறையில் செய்து கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு-கிழக்கு மாகாணங்களை இனம் காட்டி சர்வதேசத்திடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொண்டு தெற்கில் உள்ள ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்துள்ள வரலாறு தான் கடந்த கால அரசாங்கத்தின் வரலாறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது எனவும் எதிர்வரும் காலங்களில் நாம் யாரைத் தெரிவு செய்யப் போகின்றோம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாரினூடாக எமது கல்வியை வளர்க்கப் போகின்றோம் என்கின்ற சிந்திக்கக் கூடிய நிலையை கடந்த கால அரசாங்கம் இன்று எங்களுக்கு உருவாக்கித்தந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.