ஏதிலிக் கோரிக்கையாளர் தொடர்பில் நீதிமன்றம் விதித்த தீர்ப்பானது அமெரிக்காவிற்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என அந்நாட்டு அரச தலைவர் டொனால்ட் ட்றம்ப் தெரிவித்துள்ளார்.
ஏதிலிக் கோரிக்கையாளர்களை மெக்ஸிக்கோவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பிலான தமது திட்டத்திற்கு நீதிபதி தடை ஏற்படுத்தியதாக ட்றாம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்கு மெக்ஸிக்கோ மிகவும் ஆபத்தான நாடு என்ற நீதிபதியின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு பாதகமானது என ட்றம்ப் டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ளார்.
சென் பிரான்ஸிஸ்கோவின் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஏதிலிக் கோரிக்கையாளர் தொடர்பிலான வழக்கு விசாரணையில் ட்றம்பின் கொள்கைக்கு முரணான வகையில் தீர்ப்பு அறிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிபதியின் இந்த தீர்ப்பு குறித்து மேன்முறையீடு செய்ய உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.