புpரித்தானியாவில் உள்ள எக்வடோர் நாட்டுத் தூதரகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தஞ்சம் அடைந்திருந்த வுpக்கிலீக்ஸ் இணையத்தள தாபர்கள் ஜூலியன் அசான்ஜே கைது செய்யப்பட்டு;ள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து தஞ்சமடைந்திருந்த அசான்ஜேஐ, லண்டனில் உள்ள எக்வடோர் நாட்டுத் தூதரகத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பிரி;த்தானியக் காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவருக்கு வழங்கியிருந்த அரசியல் தஞ்சத்தை ரத்துச் செய்த எக்வடோர் அரசு, காவல்துறையைத் தூதரகத்திற்கு அழைத்தது.
சர்வதேச சாசனங்களை அசான்ஜ் தொடர்ச்சியாக மீறியமையால் அவரது அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டதாக எக்வடோரின் அரசு கூறியுள்ளது.
அசான்ஜ் மீது சுவீடனில் சுமத்தப்பட்டிருந்த பாலியல் முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் தற்போது கைவிடப்பட்டுவிட்டன.
ஆனால், பிரித்தானிய நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தவறிய குற்றச்சாட்டில் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளார்.