இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய விசேட உரையின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்குள் நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.