மியான்மார் நாட்டில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 54 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பச்சை மாணிக்க கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில் திடீரென இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
மியான்மார் நாட்டில் தாது பொருட்களை எடுப்பதற்கான சுரங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் பல முறையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் சுரங்கங்களில் நிலச்சரிவுகளும், விபத்துகளும் வழக்கம்போல் நடைபெறும் ஒரு நிகழ்வாகி விட்டது.
இந்த சுரங்கத்தில் பணிபுரிந்த 54 தொழிலாளர்கள் குறித்த நிலச்சரிவில் சிக்கி புதையுண்டனர். இதைத்தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் இடம்பெற்ற நிலையில் உயிரிழந்த 54 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு வருடத்திற்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் பெருமளவில் சீனாவுக்கு கடத்தப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.