நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் அளித்துள்ளது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்கான அவசரகால சட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காகவே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டத்தினாலும், தேசிய அரச பேரவையின் 1978 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்திருந்தார்.