நீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும், வணிக நிறுவனங்களும், வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பில் நேற்று முன்தினம் பிற்பகலில் கும்பல் ஒன்று தடிகளுடன் நடமாடுவது அவதானிக்கப்பட்டது. முஸ்லிம்களைத் தாம் தேடித் திரிவதாக இந்தக் கும்பல் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், பதட்டத்தைத் தணிக்கும் நோக்கத்துடன் அங்கு முஸ்லிம், கிறீஸ்தவ மதத் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது.
–