எதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை சிறுவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் ஆரம்பமென அரசு அறிவித்துள்ளது எனவும் ஆனால் அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு மில்லியன் சிறுவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது தமது கடமை என தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு உண்மைகளை வெளியே சொல்லாமல் விதிக்கப்படும் தடையாக நோக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் பாதுகாப்புத் தரப்புக்கு அரசியல் தலையீடுகள் எதுவும் இருக்க கூடாது எனவும் குற்றம் செய்தவர்கள் கட்டாயம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.