தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்று வரும் சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களினால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த சூழல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்திலும் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகளவில் கொல்லப்பட்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அதிகளவில் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகளவான தமிழ் மக்களே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் தமிழ் மக்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.