வாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என தேசியவாத கொங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாக்கு இயந்திரத்தில் குளறுபடி நடைபெறுவதாக ஏற்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து தேர்தலுக்கு முன்பு ஆந்திரா மற்றும் குஜராத்தில் நிபுணர்கள் மூலம் பரிசோதனை நடத்தி காட்டப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பரிசோதனையில் தாமும்; கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு இயந்திரத்தில் வாக்கு செலுத்தும் பட்டனை தாம் அழுத்தய போது, செலுத்திய வாக்கு தாமரைக்கு சென்றது என குறிப்பிட்டுள்ளார்.
தாம் தனிப்பட்ட முறையில் இந்;த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.