ஒன்டாரியோவில் பியர் விற்பனை செய்வது குறித்த நடைமுறைகளில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
முதல்வர் டக் போர்ட்டின் புறோகிரசிவ் கொன்சவேடிவ் அரசாங்கம் பியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் செய்ய உத்தேசித்துள்ளது. பியர் ஸ்டோர் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை ரத்து செய்வதற்கு மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு உடன்படிக்கையை ரத்து செய்வதன் மூலம் வீதி ஓரங்களில், மளிகைக் கடைகளில் பியர் மற்றும் வைன் வகைகளை விற்பனை செய்வதற்கான சாத்தியம் உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் டக் ஃபோர்ட்டின் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர உள்ளதாக பியர் ஸ்டோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பியர் ஸ்டோர் நிறுவனத்துடன் கடந்த லிபரல் அரசாங்கம் பத்தாண்டு கால ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.