நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மல்வானையில் உள்ள அவரது வீட்டில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதை அடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பகுதியில் நடத்தப்பட்ட ஒரு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போதே 92 துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட இந்த ரவைகள் டிழசந ரக12 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படுவன என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலை அடுத்து நாடு பூராகவும் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





