இனவாதத்தை தூண்டி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் மஹிந்த தரப்பினர் ஈடுபட்டு வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிமட பகுதியில் இன்றுஇடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான எதிர்க்கட்சியினர் அதிகாரத்திற்கு மீண்டும் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் அவர்கள் கருத்து தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் அச்சத்தை பயன்படுத்தி இனவெறியைத் தூண்டி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அவர்கள் முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும்; பொதுமக்கள் இனவெறியர்கள் கிடையாது எனவும் அவர்களின் தூண்டுதல்களுக்கு சிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.