குண்டு தாக்குதல்களின் சூத்திரதாரிகளுடன் உறவை பேணிய ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்க வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகை முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
அவர்கள் மூவரையும் பதவிகளை ராஜினாமா செய்வதற்கென வழங்கப்பட்ட 24 மணி நேர கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகை முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
இதனிடையே இஸ்லாம் தேசம் (ஐஎஸ்) அமைப்புக்கு எதிராக யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
தம்மை இலங்கையின் விசுவாசியென காண்பிக்க முஸ்லீம் சமூகம் பாடுபட்டுவருகின்ற போதும் அதனை சிங்கள தேசம் பொருட்டாகவே எடுக்காதுள்ளமை தெரிந்ததே.