கிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கைகளில் வரவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுபவர் பக்கச்சார்பாக செயற்படுபவராக இருந்தால் முரண்பாடுகளை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கைகளில் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதற்காக தமிழ் தலைமைகள் கட்சி பேதங்கள் இன்றி முதலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.