பூர்வகுடியின பெண்கள் மற்றும் சிறுமியரின் மரணங்கள் மற்றும் காணாமல் போதல்கள் ஓரு வகையிலான இனச்சுத்திகரிப்பு என்று பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே ஒப்புக் கொண்டுள்ளார்.
பூர்வகுடியின பெண்கள், சிறுமியர் காணாமல் போன மற்றும் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழு, இந்த சம்பவங்களை ஓர் இனச்சுத்திகரிப்பு என அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அண்மைய தசாப்தங்களில் இவ்வாறு பூர்வகுடியின பெண்கள் சிறுமியர் உயிரிழந்துள்ளதுடன், காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்ட போது பிரதமர் ட்ரூடே, இனச்சுத்திகரிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் நேற்றைய தினம் வான்கூவாரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது பிரதமர் ட்ரூடே பூர்வகுடியின பெண்கள், சிறுமியர் ஒரு வகையிலான இனச்சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர் என ஒப்புக்கொண்டுள்ளார்.
உயிரிழந்த மற்றும் காணாமல் போனதாகக் கூறப்படும் பூர்வகுடியின பெண்கள் மற்றும் சிறுமியரின் மொத்த எண்ணிக்கை மதிப்பீடு செய்யப்பட்டதிலும் 16 மடங்கு உயர்வானது எனத் தெரிவிக்கப்படுகிறது.