ஒன்டாரியோவில் மாகாண அரசதுறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு வருடம் ஒன்றுக்கு ஒரு சதவீதத்திலும் குறைவாக வரையறுப்பதற்கு மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான புறோகிரசிவ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து வழிவகுக்கும் சட்டமூலம் ஒன்றை மாகாண அரசு சட்டசபையி;ல் சமர்ப்பித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு வரை, மூன்று வருட காலத்திற்குச் சம்பள அதிகரிப்புக்கள் கட்டுப்படுத்தப்படவுள்ளன.
மாகாணத்தின் நிதி நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு பேணப்படுமென திறைசேரிச் சபையின் தலைவர் பீட்டர் பெத்லென்ஃபல்வி (Pநவநச டீநவாடநகெயடஎல) தெரிவித்தார்.
பல்வேறு அரச திணைக்களங்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவன பணியாளர்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் பணியாளர்களின் சம்பளங்களின் அதிகரிப்பும் கட்டுப்படுத்தப்படும்.
எவ்வாறெனினும், இந்த உடன்படிக்கையானது தற்போதைய உடன்படிக்கையின் கீழ் ஊதியம் பெறுவோரை பாதிக்காது என்று தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த உத்தேச சட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒன்றாரியோ மாகாண அரச பணியாளர்களின் பணியை முதல்வர் டக் ஃபோர்ட் மதிக்காதமையாலேயே இவ்வாறு செய்வதாக மாகாண என்டீபீயின் தலைவி அன்றியா ஹோவார்த் கண்டனம் வெளியிட்டுள்ளார்.