கத்தோலிக்க தேவாலயங்களில் ஆராதனைகள் செய்வது தொடர்பிலான முறைமையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
வத்திக்கானின் புனித திருத்தந்தை பிரான்ஸிஸ் ஆண்டகையினால் இந்த திருத்தங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் ஆராதனைகளில் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைப் பிரயோகங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
“தேவனே எங்களை சோதனையில் விழ விடாதேயும்” என்ற வசனத்திற்கு பதிலீடாக “எங்களை சோதனையில் விழத் தூண்டாதியும்” என்ற அர்த்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வர்த்தைப் பிரயோகத்திற்கு கத்தோலிக்கச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.