இலங்கையில் பொறுப்புக் கூறலை முன்னகர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாகவும், பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மகாநாட்டின் ஊடாகவும், ஏனைய சர்வதேச மகாநாடுகள் ஊடாகவும் கனடா தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது.”
பிரேரணை நிறைவேற்றப்பட்டவேளை வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியற் குழுவின் பின்வரும் உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர்.
லிபரல்-
ஃபிறாங்க் பெய்லிஸ் (Frank Baylis), மைக்கல் லெவிட் (Michael Levitt), ராஜ் சாய்னி (Raj Saini), ஜரி சித்து (Jati Sidhu), அனிரா வன்டென்பெல்ட் (Anita Vandenbeld), பொறிஸ் வெஸெஸ்நெவ்ஸ்கி (Borys Wrzesnewskyj), கமால் கேரா, நாடாளுமன்ற செயலாளர் (Kamal Khera), ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), ஃபிறாங்க் பெய்லிஸ்க்குப் (Frank Baylis) பதிலான உறுப்பினர்
கொன்சேவடிவ்
ஸியாட் அபுல்ரயிஃப் (Ziad Aboultaif), லியோனா அலெஸ்லெவ் (Leona Alleslev), கார்னெட் ஜெனுவிஸ் (Garnett Genuis) எரின் ஓ ரூலுக்குப் (Erin O’Toole) பதிலான உறுப்பினர்
என்டீபீ
கீ கறோன் (Guy Caron)
நிறைவேற்றப்பட்ட பிரேரணை பின்வருமாறு அமைந்துள்ளது:
இலங்கையில் வன்முறையாலும், போரினாலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது.
இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து அண்மையில் இடம்பெற்ற வன்முறையைக் கண்டிக்கும் அதேவேளை, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தவாறு இன வெறுப்பையும், தீவிரவாதத்தையும் எதிர்கொள்வதற்கான முயற்சிகளை அதிகரிக்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்ட கடப்பாடுகளை தெளிவாக வரையறுத்த காலத்தினுள் நிறைவேற்றுமாறு கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் மத்தியில் மீளிணக்கத்தை ஏற்படுத்து ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது.
2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போரின் இறுதிப் பகுதி உள்ளடங்கலாக இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கிறது.
இந்தப் பிரேரணையை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, 109 ஆம் இலக்க நிலையியல் கட்டளைக்கு அமைவாக இந்த அறிக்கைக்கு விரிவான பதில் ஒன்றை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கிறது.”