பேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சில குழுக்கள், சமூகங்களிடையே இன ரீதியான பதற்றத்தையும் மோதலையும் தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் காலிங்க இந்த திஸ்ஸ கூறியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமை உடன்படிக்கை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் காலிங்க இந்த திஸ்ஸ தெரிவித்துள்ளார்.