மாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது என ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
ஃபோர்ட் பெஸ்;ட் என்னும் வருடாந்த பார்பிக்யூ நிகழ்வில் பங்கேற்றிருந்த மக்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களை விடவும் தமது அரசாங்கம் ஓராண்டு காலப் பகுதியில் பல்வேறு விடயங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குரோதப் பேச்சு, இனவாதம், மத விரோதப் பிரச்சாரங்கள் போன்றவற்றை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.