ஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாthe upper canadaகல்விச் சபையானது 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒன்டாரியோவின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய அப்பர் கனடா பிராந்தியத்தில், உளச் சுகாதாரம் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு உதவும் நோக்கில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ள விசேட பணியாளர்களே இவ்வாறு பணி நீக்கப்பட உள்ளனர்.
4200 பணியாளர்களில் 3.8 வீத பணியாளர்கள் பணி நீக்கப்படுவதாக பிராந்திய கல்விப் பணிப்பாளர் ளுவநிhநn ளுடறைய தெரிவித்துள்ளார்.
மாகாண அரசின் நிதிக்குறைப்பு நடவடிக்கைகளின் அங்கமாக 11.7 மில்லியன் டொலர் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பணியாளர்களின் எண்ணிக்கை குறைப்பானது மாணவர்களுக்கு பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் பெற்றோர் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.