தமிழ் சமூகத்தை அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக தொடர்ந்தும் வைத்துக்கொள்ளவே வடக்கு – கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குண்டு வெடித்தது இலங்கையின் எட்டு இடங்களில், கொழும்பிலும் கிழக்கிலும். ஆனால் இராணுவம் பாதுகாப்பதும், இராணுவம் விசாரணைக்கு நிற்பதும், காவலுக்கு நிற்பதும்..