யாழ்ப்பாணம் – நாவற்குழியில் முதல் சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை திறந்துவைக்கப்படவுள்ளது. யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்டமான பௌத்த விகாரை இதுவாகும். இந்த விகாரையின் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.





