கொன்சர்வேடிவ் கட்சியின் கல்கெரி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓபராய் தனது 69ம் வயதில் காலமானார்.
கனேடிய நாடாளுமன்றிற்கு தெரிவான முதலாவது இந்திய அரசியல்வாதி தீபக் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிப்பதாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
தீபக்கின் மறைவு அதிர்ச்சியளிப்பதாகவும் கட்சிக்குள் அன்பையும் மகிழ்ச்சியை உண்டாக்கும் வண்ணம் தீபக் திகழ்ந்தார் எனவும் கென்சவேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ட்றூ ஷ_யார் (யுனெசநற ளுஉhநநச) தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தீபக், கடந்த 1997ம் ஆண்டு முதல் கல்கரியின் குழசநளவ டுயறn தொகுதியை பிரதிநிதித்துவம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த இந்திய கனேடிய அரசியல்வாதி என்ற பெருமையையும் தீபக் வகித்து வந்தார்.
அத்துடன், நீண்ட காலம் வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராகப் பதவி வகித்த ஒருவராக அவர் காணப்பட்டார்.
தான்சானியாவில் பிறந்த ஒபராய், மூண்று கண்டங்களில் கல்வியைத் தொடர்ந்த பின்னர் 1977ம் ஆண்டு தனது குடும்பத்துடன் கல்கரியில் குடியேறினார்.