2019ஆம் ஆண்டுக்கான காலநிலை தொடர்பான சர்வதேச மாநாடு ஸ்பெய்னில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
முன்னதாக, காலநிலை தொடர்பான சர்வதேச மாநாடு சிலியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, மாநாட்டை நடத்துவதில் இருந்து சிலி விலகிக் கொண்டது.
இந்தநிலையிலேயே தற்போது குறித்த மாநாடு ஸ்பெய்னுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
காலநிலை குறித்த சர்வதேச மாநாடு நடைபெற வேண்டியமை அரசியல் ரீதியாக முக்கியமானது எனவும், மாநாடு இரத்துச் செய்யப்பட்டால், அது நல்ல அறிகுறியாக இருக்காது எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.