ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்காக 243 சிறிலங்கா இராணுவத்தினர் இன்று (13) அதிகாலை மாலி நாட்டை நோக்கி புறபட்டு சென்றுள்ளனர்.
சிறிலங்கா படைகளது போர்க்குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி
பல்வேறு தரப்பாலும் நிரூபிக்கப்பட்டநிலையிலும் அனைத்துலக விசாரணை ஒன்றரை மேற்கொள்வதை விடுத்து அவர்களுக்கு வெள்ளையடிக்கும் நடவடிக்கைகளில் ஐநா தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது மெய்யான மனிதவுரிமை ஆர்வலர்களை கடும் விசனத்துக்குள்ளாக்கியுள்ளது.
அண்மையில் சிறிலங்காவின் அமைதிப்பணி இடைநிறுத்தப்படும்
என ஐநா வட்டடங்கள் கூறிவந்த போதும் நோக்கர்கள் பலர் இது ஐ நாவின் வேற்று அறிக்கை என்றும் உண்மையில் அவ்வாறான நடவடிக்கை எதுவும் ஐ நாவால் மேற்கொள்ளப்படாது எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.