இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு இனங்காணப்பட்டுள்ளார் என அந்நாட்டின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெஞ்சமின் நெத்தன்யாஹுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகளின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த தீர்ப்பை ஏற்று பதவி விலகப் போவதில்லை என பெஞ்சமின் நெத்தன்யாஹு தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்ப்பு தனக்கு எதிரான ஒரு சதிமுயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





