• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Tuesday, June 16, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் உலகம்

தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23-பொகேயின்வில்(Bougainville)

dineshpress by dineshpress
November 22, 2019
in உலகம், சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அவுஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள சிறு தீவுகளின் ஒரு தொகுதியே பொகேயின்வில்(Bougainville) என்று அழைக்கப்படுகிறது. 28,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கு ஒரு மக்கள் தொகுதி வாழ்ந்தார்கள். பின்னர் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னுமொரு மக்கள் தொகுதி படகுகளில் இத்தீவிற்கு வந்து சேர்ந்தார்கள்.

இவர்கள் தான் வீடுகளில் வளர்க்கப்படும் பலவிதமான மிருகங்களை இத்தீவிற்கு கொண்டு வந்தார்கள். 16ம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பொகேயின்வில் என்பவரே இத்தீவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். அவர் தனது பெயரை அத்தீவிற்கு சூட்டினார். பின்னர் 19ம் நூற்றாண்டில் பிரித்தானிய மற்றும் ஐ-அமெரிக்க கடலோடிகள் இத்தீவிற்கு உணவுப்பொருட்கள் பெற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மனி இத்தீவை முற்றுகையிட்டது. தொடர்ந்து கிறிஸ்தவ சமயபரப்பிகள் இங்கு வந்திறங்கினார்கள்.

முதலாம் உலக போரின் போது ஆவுஸ்திரேலியா  இத்தீவை முற்றுகையிட்டு தனது என பிரகடனப்படுத்தியது. இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் இத்தீவை ஒரு வருடகாலத்திற்கு கைப்பற்றி வைத்திருந்தது. 1949ம் ஆண்டு பொகேயின்வில்லும் அண்மையிலுள்ள தீவுகளும் பப்புவா நியூகினி பிரதேசமாக ஒன்றுகூட்டப்பட்டு ஐநாவால் அவுஸ்திரேலியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

1960களில் பொகேயின்வில்லில் செப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 1972இல் அவுஸ்திரேலிய கம்பனி ஒன்று இங்கிருந்த செப்பு தோண்டும் வேலையை செய்தது. அக்காலத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய திறந்த வெளி சுரங்கமாக இது இருந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் 20 வீதம் ப்பபுவா நியூகினி அரசுக்கு கொடுக்கப்பட்டது. இது ப்பபுவா நியூகின் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் 45 வீதமாக இருந்தது.

சூழலழிவு, செப்பு வருமானம் ஒட்டுமொத்தமாக தீவுக்கு வெளியே போவது, வெளியார் பெரும்தொகையாக செப்பு சுரங்க வேலைகளுக்காக தீவுக்குள் வருவது எல்லாமே சுரங்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து முரண்பாடுகளை வளர்த்தது.

1975ம் ஆண்டு ப்பபுவா நியூகினி தனிநாடாக அவுஸ்திரேலியாவால் பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சில நாட்களிலியே பொகேயின்வில் “வட சொலமன் குடியரசு” என்ற தனிநாட்டு பிரகடனம் செய்ய முயற்சித்தது. வேறெந்த நாடுகளும் இதை அங்கீகரிக்காததால், பொகேயின்வில் சில தனித்துவமான ஆட்சி உரிமைகளுடன் பப்புவா நியூகினியின் அங்கமாகியது.

ஆயுதப் போராட்டம்

1988 இலிருந்து 1998 வரை பொகேயின்வில்லில் தனிநாட்டுக்கான ஒரு தீவிர ஆயுதப்போராட்டம் பொகேயின்வில் புரட்சிகர அமைப்பினால் நடத்தப்பட்டது.

கொப்பர் சுரங்கங்களை சுற்றி முதலில் ஆரம்பித்த வன்முறைகள் தீவின் ஏனைய இடங்களுக்கும் பரவியது. செப்பு கம்பனி தனது செப்பு செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் வந்தது. பப்புவா நியூகினி இராணுவத்திற்கு அவுஸ்திரேலியா இராணுவ உதவிகள் வழங்கியது.

பல கிராமங்கள் தீயிடப்பட்டன. 1990ம் ஆண்டு பொகேயின்வில் புரட்சிகர இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பொகேயின்வில்லை விட்டுவிட்டு பப்புவா நியூகினி அரசு பொகேயின்வில் இலிருந்து பின்வாங்கியது. பொகேயின்வில் புரட்சிகர இராணுவத்தின் தலைவர் ஃபிரான்சிஸ் ஓனா மே 1990இல் தனிநாட்டு பிரகடனம் செய்தார். பப்புவா நியூகினி அரசு அவுஸ்திரேலிய அரசின் உதவியுடன் தொடர்நது பொகேயின்வில் மீது பொருளாதார தடைகள் போட்டது.

பொகேயிவில் தனியரசு தீவெங்கும் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியததால் பல ஆயுதக்குழுக்கள் தோன்றி வன்முறைகள் அதிகரித்தன. அவற்றில் சில பப்புவா நியூகினி அரசிடமிருந்து உதவிகள் பெற்றன. 1991-1992 காலப்பகுதியில் பப்புவா நியூகினி அரசு மீண்டும் பொகேயின்வில்லின் சில பகுதிகளில் ஆட்சி செலுத்த தொடங்கிய போது மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடித்தது. இம்முறையும் பப்புவா நியூகினி இராணுவம் பல தோல்விகளை கண்டது.

அப்போதைய பப்புவா பிரதமர் சான் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யும் எண்ணத்துடன் ஒரு கூட்டம் ஒழுங்கு படுத்தினார். பொகேயின்வில் தலைவர்கள், முக்கியமாக  பொகேயின்வில் புரட்சிகர இராணுவத்தின் தலைவர் ஓனா, தமக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி இதை தவிர்த்தார்கள். எட்டப்பட்ட ஒப்பந்தம் பலனழிக்கததால், பப்புவா நியூகினி அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து மீண்டும் போரை ஆரம்பித்தது.

லண்டனில் தலைமையகத்தை கொண்டு இயங்கும் சன்ட்லைன் என்ற கம்பனியை 1997 இல் போரில் ஈடுபட பப்புவா நியகினி பிரதமர் சான் அமர்த்தினார். இதற்கு பல எதிர்ப்புகள் உருவானதால் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

போர்நிறுத்தம்

போர் நடந்த ஒன்பது ஆண்டுகளில் 4,000 முதல் 20,000 பேர் கொல்லப்பட்டனர். இது இந்த பொகேயின்வில் தேசத்தின் மக்கள்தொகையில் 3% முதல் 13% வரை இருக்கும்.

பதவியேற்ற புதிய பிரதமர் இராணுவ தீர்வை எதிர்த்தார். நியூசிலாந்தில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் உருவானது. அதை கண்காணிக்க நியூசிலாந்து ஆவுஸ்திரேலிய குழு ஒன்று அமர்த்தப்பட்டது. தொடர்ந்த முரண்பாடுகள் பலவற்றை தாண்டி 2001 இல் சமாதான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதன் பிரகாரம் 2019 இல் ஒரு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

இந்த வாக்கெடுப்பு தான் நவம்பர் 23ம் திகதி ஆரம்பிக்கிறது. அதன் முடிவு டிசம்பர் மாத இறுதியில்தான் வெளியாகும்.

 

Previous Post

கனடா அமைச்சரவையில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட அனிதா ஆனந்த் என்ற தமிழ்ப் பெண் இடம்பெற்றுள்ளார்.

Next Post

குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைந்திருந்த வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் ..

Related Posts

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !
உலகம்

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !

June 24, 2024
ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி
உலகம்

ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை
உலகம்

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
Next Post

குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைந்திருந்த வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் ..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In