எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து அதன் பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுப்பார் என அறிய முடிகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.