ஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் பேரணியாக வந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் அவரது நினைவிடத்தில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் வாலாஜா சாலையில் இருந்து மவுன ஊர்வலமாக நடந்து சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
மவுன ஊர்வலத்தில் அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தலைமை கழக நிர்வாகிகள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், தமிழ்மகன் உசேன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், பாண்டியராஜன், தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார், மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, தி.நகர் சத்யா, விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, வாலாஜாபாத் கணேசன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், அலெக்சாண்டர், சிறுணியம் பலராமன், திருத்தணி ஹரி, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் உங்களுக்காக டாக்டர் சுனில், ஆர்.எம்.டி. ரவிந்திர ஜெயன் முகப்பேர் இளஞ்செழியன், முன்னாள் கவுன்சிலர் சின்னையன், மின்சாரம் சத்தியநாராயண மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. புரசை வி.எஸ்.பாபு உள்பட ஆயிரக்கணக்கான பேர் ஊர்வலத்தில் பங்கேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஊர்வலத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.