மாற்றங்களை கொண்டுவரும்போது எதிர்ப்பு வருகிறது. நமது இலக்கை அடைய ஒன்றிணைந்து பாடுபடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையின் நூறாம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”பொருளாதாரத்தின் பெரும்பாலான துறைகளை முறைப்படுத்த முயற்சித்தோம். பொருளாதாரத்தை நவீன மயமாக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் முன்னேறி வருகிறோம்.
மாற்றங்களை கொண்டுவரும்போது எதிர்ப்பு வருகிறது. நமது இலக்கை அடைய ஒன்றிணைந்து பாடுபடுவோம். 5-6 ஆண்டுகளுக்கு முன்பு நமது பொருளாதாரம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த அரசு அதை நிலை நிறுத்தியது மட்டுமல்லாமல், அதை முறைப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டது. தொழில்துறையில் பல தசாப்தங்களாக கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.