தனது பதவியினை ராஜினாமாச் செய்வது குறித்து வெளியிட்ட அறிவிப்பினை உக்ரைன் பிரதமர் மீளப்பெற்றுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் பிரதமர் ஒலேக்ஸி ஹொன்சாரூக் (Oleksiy Honcharuk) தனது பதவியினை ராஜினாமாச் செய்யவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
எனினும் அவரது ராஜினாமா கடிதத்தினை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே உக்ரைன் பிரதமர் ஒலேக்ஸி ஹொன்சாரூக் தனது தீர்மானத்தினை மாற்றிக் கொண்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் ராஜினாமாச் செய்யப்போவதில்லை எனவும், ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் இணைந்து நல்லுறவைப் பேண விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியை அவர் விமர்சித்த குரல் பதிவுகள் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ராஜினாமாச் செய்யத் தீர்மானித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.