சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களைத் தொடர்ந்து எலன் புயல் இங்கிலாந்தைத் தாக்கும் என்று லங்காஷயர் லைவ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களால் பிரித்தானியா முழுவதும் பேரழிவு ஏற்பட்ட நிலையில் புதிய புயலான எலன் இங்கிலாந்தைத் தாக்கவுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக இங்கிலாந்தில் தீவிரமான வானிலை நிலவிவருகின்றது.
முதலில் வீசிய சியாரா புயலை காரணமாக லண்டன் ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வலையமைப்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து டென்னிஸ் புயல் லண்டனில் 50 மைல் வேகத்தில் காற்று வீசியது. அத்துடன் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்கள் முழுவதும் கடுமையான மழை பெய்தது.
ஹீத்ரோ மற்றும் கற்விக் விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்துக்கள் ரத்துச் செய்யப்பட்டன.
தொடர்ந்து வரும் நாட்களில் எலன் மற்றும் பிரான்சிஸ் புயல்கள் இங்கிலாந்தைத் தாக்கும் என்று லங்காஷயர் லைவ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
வானிலை அலுவலகம் தற்போது மற்றொரு புயல் குறித்து முன்னறிவிப்பு விடுக்கவில்லை என்றாலும், இங்கிலாந்தைத் தாக்கும் அடுத்தது புயல்கள் எலன் மற்றும் பிரான்சிஸ் என்று கூறப்படுகின்றது.