உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிதீவிர நிலையை அடைந்துள்ளதாக அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை வந்துவிட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,804 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,497 ஆகக் கூடியுள்ளது. ஆனால், சீனாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இப்போது உலகில் 6 கண்டங்களில் 53 நாடுகள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் 93, தாய்லாந்தில் 40, தைவான் 32, பஹ்ரைன் 26, குவைத், ஆஸ்திரேலியா 23, மலேசியா 22, பிரான்ஸ் 18, ஜெர்மனி 18, இந்தியா-3, பிரேசில் 1, எகிப்து 1, ஜார்ஜியா 1 உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த 82,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் இந்த வைரசின் தாக்கம் மிகக் குறைவாக உள்ளது. கரோனா வைரசின் உலகளாவிய பரவலையும், அதற்கு அந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. கரோனா வைரஸ் இந்தியாவில் பரவினால் இந்தியா எவ்வாறு சமாளிக்கும் என்பது குறித்து கவலை அளிப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுதை தடுக்க உலகம் நாடுகள் முழுவதும் அதிதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் அதிதீவிர நடவடிக்கை எடுப்பதன் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனாம் கெப்ரிசிஸ் குறிப்பிட்டுள்ளார். லூதியானா, நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 3000 உயிர்களைப் பறித்துள்ள கரோனா வைரஸ் அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ளது. இதனிடையே கரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் சுற்றுலா துறைக்கு 22 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உலக பயணம் மற்றும் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. அதிதீவிர நடவடிக்கை எடுப்பதன் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனாம் கெப்ரிசிஸ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஈரான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 19-ஆம் தேதி ஈரானில் இந்த வைரஸ் இரண்டு பேருக்கு பரவியது. தற்போது ஈரானில் வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. ஈரானில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
ஈரானில் துணை அதிபர்களில் ஒருவரான மசூமே எப்டகர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை துணை அமைச்சரான இராஜ் ஹரிர்ஜி மற்றும் ஒரு எம்.பிக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஈரானில் 245 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஈரானில் இருந்து பல நாடுகளுக்கும் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
புனித நகரமாக கருதப்படும் கோம் நகரில் இருந்து கரோனா பரவத் தொடங்கியதாக கருதப்படுகிறது. ஈரானில் மீன்பிடித் தொழில் செய்யும் தமிழர்கள் தங்களை மீட்டு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர்கள் 800 பேர் அங்குள்ள தீவுகளில் தவித்து வருகின்றனர். கீஸ் தீவு, சிங்கா தீவு உள்ளிட்ட 4 தீவுகளில் தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.