கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 15 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 204 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.