கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில், அமெரிக்க குடிமக்கள் தவிர அனைத்து வெளிநாட்டினருக்குமான தனது எல்லைகளை மூட கனடா தீர்மானித்துள்ளது.
மனைவி சோபியாவுக்கு வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த பின் சுய தனிமைப்படுத்தலில் உள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது வீட்டிற்கு வெளியே இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களுக்கு கனடாவுக்குள் நுழைவதை நாங்கள் மறுப்போம். எல்லைத் தடையில் இருந்து அமெரிக்கர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவுவதற்காக மக்கள் வீட்டில் தங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மார்ச் 18ஆம் திகதி முதல் நான்கு கனேடிய விமான நிலையங்களுக்கு சர்வதேச விமானங்களை கட்டுப்படுத்தவுள்ளோம் எனினும், உள்நாட்டு விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படாது’ என கூறினார்.