இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த
ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி தொடர் முழுமையாக இரத்து
செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஊரடங்கு உத்தரவானது ஏப்ரல்
14ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும்.
இதனால் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் இந்திய கிரிக்கெட் சபைக்கு
நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.